ண்டல வட்டாட்சியரின் ( Tahsildar ) கடமைகளும்,பொறுப்புகளும் 

 வருவாய் துறை நிர்ணயம் செய்துள்ளதுஅவைகள்:

 வருவாய் ஆய்வாளர்கள்நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடையபணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.

வருவாய் வரி வசூல்கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும் வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின்வசூல் பணிகளை ஆய்வு செய்தல்.

கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.

” மற்றும் “பி” மெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளை பிறப்பித்தல்.

அரசு புறம்போக்கு இடங்களிலுள்ள மரங்களை தணிக்கை செய்தல் மற்றும் அவற்றில் மகசூலை ஏலம்விடநடவடிக்கை எடுத்தல்.

முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.

பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்

மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கைஎடுத்தல்.

ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல்கல்போன்றவை தோண்டிஎடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.

வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.

வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்துஅங்கீகரித்தல்.

பிறப்புஇறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.

நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படைநிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல்மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.

குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.

அரசு நில ஆக்கிரமிப்புகளை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவர் என்பதை சரிபார்த்தல்.

தீர்வை ஜாஸ்திபசலி ஜாஸ்திவரி தள்ளுபடி இனங்கள் மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புக்கள் ஆகியவற்றைதணிக்கை செய்தல்.

வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல்.

வருவாய்த் துறை சான்றிதழ்களின் நகல்கள் கேட்டுவரும் மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.

சாதிச் சான்று வழங்குதல் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர).
நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்திஆணைகள் வெளியிட ஆவன செய்தல்.

பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் குறித்த ஆணைகள் பிறப்பித்தல்.

மழைமானிகள் தணிக்கையிடுதல்.

நில அளவை கற்களை தணிக்கை செய்தல்.

அரசு புறம்போக்கு நிலங்களை தணிக்கையிட்டு ஆட்சேபனையுள்ள  ஆக்கிரமணங்களை கண்டுபிடித்துநடவடிக்கை எடுத்தல்.

வருவாய் ஆய்வாளர்களின் தன் பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.

வருவாய் ஆய்வாளரின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.

  • பிற பணிகள்

1.  பொது இடங்களில் உள்ள மரங்களின் மதிப்பு நிர்ணயம் செய்தல்

2.  நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.

3.  கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.

4.  வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.

5.  சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.

6.  தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.

7.  மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.

8.  கிராம மக்களின் சுகாதார நிலைகால்நடைகளின் சுகாதார நிலைகுடிநீர் விநியோகம்மழையளவுபயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.

9.  கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.

10.பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.

11.மக்கள் தொகை கணக்கெடுப்புகால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலியபணிகளை மேற்பார்வை செய்தல்.

12.வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.