இந்திய தண்டனை சட்டம் (IPC ) - IMPORTANT FIR SECTION
பிரிவு 147 சட்ட விரோதமான கலகத்திற்க்கான தண்டனை
பிரிவு 148 அபாயகரமான ஆயுதமேந்திக் கலகம்
பிரிவு 294 பிறருக்கு தொல்லை தரும் வகையில்: பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும்,எவரேனும், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகின்ற வகையில்
பிரிவு 300 கொலைக் குற்றம்
பிரிவு 301ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது மரணம் உண்டாகும் என்று தெரிந்து ஒருசெயல் புரியப்படுகின்றது.
பிரிவு 302 கொலைக்குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும்விதிக்கப்படும்.
பிரிவு 304B வரதட்சணை கொடுமை மரணம்
பிரிவு 307 ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன் செயலால் அத்தகைய மரணம்சம்பவிக்கு என்ற தெளிவுடன் செயல் செய்யப்பட்டால், அது செய்யப்படும் சூழ்நிலையை அனுசரித்துக் கொலைக்குற்றம் செய்வதற்கான முயற்சி என்று முடிவாக்கப்படுகிறது.
பிரிவு 323 தன்னிச்சையாகக் காயப்படுத்தும் செயலை யார் புரிந்தாலும் ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம்ரூபாய்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (334 - ஆவது பிரிவின்படி இந்த செயல்புரியப்பட்டிருந்தால் இந்தப்பிரிவு பொருந்தாது).
பிரிவு 324துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல்நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை விஷம், வெடிமருந்து, துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள், இன்னும் மனிதர்களுடைய சுவாசத்தில், உள்ளுறுப்புகளில் அல்லதுரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய அபாயத்தை உண்டாக்கக்கூடும் மிருகத்தாலும் அது சாத்தியமே, எனவேஇவற்றில் ஏதாவது ஒற்றைப்பயன்படுத்தி தன்னிச்சையாகக் காயம் உண்டாக்குவது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் (334 - ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ளபடி இத்தகைய செயல் புரியப்பட்டால் இந்தத் தண்டனை பொருந்தாது).
பிரிவு 375 வன்முறைப் புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.
பிரிவு 379 திருட்டு குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லதுஇரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.
பிரிவு 425 தம்முடைய செயலால் முறையற்ற நஷ்டம் அல்லது தீங்கு பொதுமக்களுக்கு அல்லது ஒரு தனிப்பட்ட மனிதருக்குஉண்டாகும் என்று தெரிந்திருந்தும் அல்லது அத்தகைய நஷ்டம் அல்லது தீங்கினை உண்டாக்க வேண்டும் என்றகருத்துடன் ஒரு சொத்தை அழிப்பதும் அல்லது அந்தச் சொத்தின் மதிப்பு அல்லது உபயோகத்தை அழிக்கக் கூடியஅல்லது குறைக்கக் கூடிய செயலைப் புரிந்தாலும், அதற்குப் பாதகமான செயலைப் புரிந்தாலும், சொத்து அழித்தல்செய்யப்படுவதாக கொள்ளப்படும்.
பிரிவு 468 பொய்யாக ஓர் ஆவணத்தைப் புனைவதன்மூலம் பிறரை வஞ்சிப்பதற்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்றகருத்துடன், அத்தகைய பொய்யாவணம் புனைவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடனும் அபராதமும்சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
0 Comments